தினந்தோறும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடால் என்னென்ன அற்புதம் உடலில் நடக்கும் என்று தெரியுமா? இதோ நீங்களே பாருங்க ..!!

தினந்தோறும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடால் என்னென்ன அற்புதம் உடலில் நடக்கும் என்று தெரியுமா? இதோ நீங்களே பாருங்க ..!!

Health

ஏலக்காய் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடும் பொழுது அது பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.ஏலக்காயால் எவ்வாறான நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சிலருக்கு திடீரென்று பசி எடுக்காமல் இருக்கும் இதற்கு ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல் நல்ல ப‌சி எடு‌க்கு‌ம்.‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம். ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும்.

தினமும் ஒரு எலக்காய் சாப்பிடுவது கண் பார்வையை அதிகரிக்கும்.குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் ஏலக்காய்களை பொடியாக்கி அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும்.

ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் நல்ல நிவாரணத்தை தருகிறது.நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு நீங்கி மூக்கு உடனே திறந்து கொள்ளும்.

மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள்.டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் உடனடியாக குறைகிறது.

-Advertisement-

ஏலக்காய் டீ தயாரிப்பது எப்படி?தேவையான பொருட்கள்
2 டம்ளர் பால்
2 ஸ்பூன் டீ தூள்
2 ஸ்பூன் நாட்டு சர்க்கரை
1 அல்லது 2 ஏலக்காய்

செய்முறை
பாத்திரத்தில் தேவையான அளவு பால் அல்லது தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடு பண்ணவும். லேசாக தண்ணீர்/பால் கொதிக்கும் போது தேவையான அளவு டீ தூள் போடவும்.

அத்துடன் ஏலக்காயை பொடியாக்கி போடவும். நல்ல கொதி வந்ததும் அடுப்பை நிறுத்திவிடவும். கப்பில் தேவையான அளவு சர்க்கரை போட்டு வைத்துக் கொள்ளவும். டீயை வடித்தட்டு பயன்படுத்தி கப்பில் ஊற்றவும்.

சக்கரை கரைவதற்காக டீயை ஆற்றிக் கொள்ளவும்.அவ்வளவு தான்… சுவையான ஏலக்காய் டீ தயார்! இந்த டீயை 5 நிமிடங்களிலேயே செய்து குடிக்கலாம்.