ஏராளமான சத்துக்களை வாரி வழங்கும் இயற்கையின் கொடை தான் வெண்டைக்காய். வெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது.
மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் அல்சரை கட்டுப்படுத்துகிறது. இதில் நன்மைத் தரக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன.
வெண்டைக்காய் நீர் என்பது வெண்டைக்காயை வேக வைத்தோ அல்லது அரைத்து எடுக்கும் நீரோ கிடையாது. வெண்டைக்காயை ஊற வைக்கும் நீர் தான். நாம் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறி. அதனை அப்படியே சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் நன்மைகள் பல கிடைக்கும்.
இரவு உறங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை எழுந்ததும் அந்த நீரை குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
சர்க்கரை நோய்க்கு
சர்க்கரை நோய் வகைகளான டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றை சரிசெய்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கு வெண்டைக்காய் தண்ணீர் அதிகளவில் உதவி செய்யும்.
கொலஸ்ட்ரால்
உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால், உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்த்து வருவதோடு, வெண்டைக்காய் நீரை குடிப்பதன் மூலம் குறைக்கலாம்.
நோயெதிர்ப்பு சக்தி
நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவோராயின் உங்களது நோயெதிர்ப்பு சக்தியை வெண்டைக்காய் தண்ணீர் வலிமையாக்கும்.
பித்த நீர்
வெண்டக்காய் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிப்பதை தடுக்கும்.
தொண்டை வறட்சி
தொடர் இருமல், வறட்டு இருமல் இருப்பவர்கள் தொடர்ந்து வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். இதில் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரியாக்கள் மற்றும் ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் தொண்டையில் ஏற்ப்பட்டிருக்கும் பாக்டீரியா தொற்றினை நீக்கச் செய்திடும்.
மலச்சிக்கல்
கரையக்கூடிய ஃபைபர்களால் கொலஸ்ட்ரால் மட்டுமல்ல மலச்சிக்கலும் கட்டுப்படும். வெண்டைக்காயில் இருக்கும் தாதுக்கள் நம் உடலில் இருக்கும் டாக்ஸின்களை நீக்க உதவுகிறது இதனால் உணவு செரிமானம் சீராக நடைப்பெற்று வயிறு தொடர்பான கோளாறுகள் சரியாகும்.
எலும்புகள்
இது நம் எலும்புகளை வலுவாக்கும். இதில் இருக்கும் ஃப்லோட் கர்ப்பிணிப்பெண்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. எலும்பு தொடர்பான நோய்கள், கை கால் மூட்டு வலி வராமல் தடுத்திடும்.
ரத்த சோகை
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் மிகச்சிறந்த பலன்களை தரும். இந்த நீரை குடிப்பதனால் ரத்த செல்கள் வேகமாக உற்பத்தி ஆக உதவுகிறது. இதனால் ரத்த சோகை கட்டுப்படும்.
சருமம்
வெண்டைக்காய் ஊற வைத்த நீரை தினமும் காலையில் பருகுவதால் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம்.