ஜூன் 3 தேதியில் வெளியாகி இன்று வரை பல திரையரங்குகளில் கலக்கி கொண்டு வரும் படம் விக்ரம். கோலிவுட் திரையுலகமே கொண்டாடிய திரைப்படம் விக்ரம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் நடித்திருந்தார்க்ள்.சூர்யாவுக்கு பதிலாக முதலில் Rolex கதாபாத்திரத்திற்கு அணுகப்பட்ட முக்கிய மலையாள நடிகர்.. யார் தெரியுமா??
நடிகர் கமலஹாசன் அவரது நடிப்பில் பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான இப்படம் உலகளவில் சுமார் ரூ.425 கோடிக்கும் மேல் வசூலை குவித்து ரஜினியின் 2.0 திரைப்படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்துள்ளது விக்ரம் என செய்திகள் வெளிவருகிறது.
அந்த சாதனை மட்டுமின்றி தற்போது தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக அதிக வசூல் செய்த திரைப்படமாக பாகுபலி திரைப்படம் தான் திகழ்ந்து வந்தது. அதனை தற்போது விக்ரம் முறியடித்து No.1 திரைப்படமாக இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அணைத்து கதாபாத்திரத்திற்கும் ஒரு சமநிலையான அங்கீகாரம் கிடைக்குமாறு தான் கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது ஆனாலும் விக்ரம் படத்தில் அனைவராலும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் என்றால் Rolex-ஆக தான் இருக்க முடியும். கடைசி நிமிடங்களில் வந்தாலும் சூர்யா அவரின் அசுர நடிப்பால் மிரட்டியிருப்பார்.அந்த ரோல் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
அது ஒரு புறம் இருக்க முதலில் அப்படியான பெரிய வரவேற்பை பெற்ற Rolex கதாபாத்தில் நடிக்க அணுகப்பட்டதே மலையாள நடிகர் “ப்ரித்விராஜை” தானாம். சில காரணங்களால் அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லையாம். பிறகு அந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் சூர்யா நடித்துள்ளார் அதற்கு அவர் பணம் ஏதும் வாங்கவில்லை என்றும் கமல் அவர்கள் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.