அட பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வந்த பிக்பாஸ் பிரபலம்… யாருன்னு நீங்களே பாருங்க புகைப்படம் இதோ..!!

Cinema

விஜய் தொலைக்காட்சியின் TRPயை முதல் இடத்தை பிடிக்க வைத்த ஒரு தொடர் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலை பிரவீன் பென்னட் இயக்கி வரும் இந்த தொடர் மலையாள சீரியலின் ரீமேக் அனைவருக்கும் தெரிந்தது தான். ஒரே ஒரு டுவிஸ்ட்டை வைத்து பல வருடங்கள் சீரியலை ஓட்டி வருகின்றனர்.

மேலும் எப்படி தான் அதில் நடிப்பவர்களும் மொக்கை கதை கேட்டு நடிக்கிறார்களோ என ரசிகர்களே பல முறை கமெண்ட் செய்துள்ளார்கள். இப்போது கதையில் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் சமையல் அம்மா-டாக்டர் அப்பாவை இணைக்கும் முயற்சியில் உள்ளார்கள்.

அதற்கு நடுவில் சௌந்தர்யாவின் தோழன் ஒருவர் திடீர் கதையில் விசிட் அடித்துள்ளார். அவருடன் குடும்பமாக அவர்கள் அடித்த லூட்டி எபிசோடை பார்த்திருப்போம். இன்னொரு பக்கம் வெண்பாவிற்கு யாரோ போன் செய்கிறார்கள் அது யார் என தெரியவில்லை.

-Advertisement-

மேலும் சௌந்தர்யாவின்  நண்பராக ஒருவர் வெண்பாவை போனில் தொடர்பு கொள்ளும் ஒருவர் என இரண்டு பேர் புதியதாக கதையில் வர தற்போது மற்றொரு பிரபலம் பாரதியை சந்திக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை பிரபல நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான ரேகா தான். அவர் யார் என்ன கதாபாத்திரம் என்பது சரியாக தெரியவில்லை.