அட இந்த பிரபல நடிகருக்கு வலை விரிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்!! பொறாமையில் பொங்கு நடிகைகள்…!!

Cinema

திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தமிழில் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கும் மாமன்னன் திரைப்படம் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. மேலும் அதை தொடர்ந்து இவர் செல்வராகவனுடன் இணைந்து நடித்த சாணி காகிதம் திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

மேலும் நடிக்கியா கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யுடன் மீண்டும் ஜோடி போட்டு நடிப்பதற்கு ஆசைப்பட்டு வருகிறார். இவர் ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக பைரவா, சர்க்கார் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே அவர் மாஸ் ஹீரோவான விஜய்யுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்தது அப்பவே சக நடிகைகளை பொறாமை பட வைத்தது.

அதை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சினிமாவில் இருக்கும் நடிகைகள் அனைவரும் விஜய்யுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகின்றனர்.

-Advertisement-

அதிலும் சில நடிகைகள் தங்களின் விருப்பத்தை வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். அவருடன் நடிப்பதற்கு பல போட்டிகள் நிலவுவதால் எப்படியாவது அந்த வாய்ப்பை பிடித்து விட வேண்டுமென்று கீர்த்திசுரேஷ் தற்போது மும்முரமாக பிளான் போட்டு வருகிறார். இதற்காக அவர் விஜய்யிடமே போன் போட்டு வாய்ப்பு கேட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் அவர் தன் சக நடிகைகளை வெறுப் பேற்றுவதற்காகத் தான் இந்த விஷயத்தில் இறங்கி இருக்கிறார். பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் இரு மொழி திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் நாயகியாக நடிப்பார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது பாலிவுட் ஹீரோயின் நடிக்க இருக்கிறார். ஆனாலும் சோர்ந்து போகாத கீர்த்தி சுரேஷ் அடுத்த பட வாய்ப்பை பிடித்து விட மீண்டும் முயற்சி செய்து வருகிறார். அவரின் இந்த முயற்சி வெற்றி பெறுமா இல்லையா என்பது விஜய்யின் கையில்தான் இருக்கிறது.