திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வில்லனாக மிரட்டி வரும் நடிகர் வினய்க்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 42 வயதாகும் நடிகர் வினய், 40 வயதாகும் நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறாராம்.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் ஒன்றாக மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலாவும் சென்றுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதையடுத்து தற்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே வேளை நடிகை விமலா ராமன் தமிழில் பாலசந்தர் இயக்கிய பொய் இயக்குனர் சேரனுக்கு ஜோடியாக ராமன் தேடிய சீதை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
-Advertisement-