அட 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!! யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

Cinema

திரையுலகில் மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார். ஸ்டண்ட் நடன இயக்குனர் ஸ்டண்ட் சில்வா புதிய படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அந்த படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் சாய் பல்லவியின் தங்கை இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு இயக்குனர் விஜய் கதை எழுதியுள்ளார். தற்போது இந்தப் படத்தில் மலையாள நடிகர் ரீமா கல்லிங்கல் இணைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

ரீமா 2011 ஆம் ஆண்டில் ஜி.என்.ஆர் குமாரவேலனின் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான ‘யுவன் யுவதி’ படத்தின் நடித்திருந்தார். ஸ்டண்ட் சில்வா இயக்கும் இந்தப் படத்தின் மூலம் ரீமா 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார். மலையாளத்தில் நடிகையாக வலம் வரும் ரீமா கணவர் ஆஷிக் அபுவுடன் இணைந்து படங்கள் தயாரித்து வருகிறார்.

-Advertisement-