பாலிவுட் சினிமாவில் இருக்கும் நடிகைகள் வயதானாலும் இளமையாகவே காணப்படுவார்கள். அந்த அளவிற்கு தங்களது உடலை இளமையாக வைத்துக்கொள்ள நிறைய விஷயங்கள் செய்வார்கள்.

யோகா, கடுமையான உடற்பயிற்சி என தொடர்ந்து செய்பவர் நடிகை மலைகா அரோரா. மலைகா, சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று அவரவர் பணிகளை செய்து வருகிறார்கள்.

மலைகா இப்போது போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இருவருக்கும் 12 வருட வித்தியாசம், இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றுவது, புகைப்படங்கள் நிறைய வெளியிடுவது என இருக்கிறார்கள்.

ஆனால் திருமணம் எப்போது என்பது தான் தெரியவில்லை. 3 கார் அடுத்தடுத்து ஒரே இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளன. அதில் மலைகாவின் ரேஞ் ரோவர் கார் இரண்டு வாகனங்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டிருக்கிறது.

இதில் லேசான காயத்துடன் தப்பிய அரோரா அருகில் இருந்த அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். லேசான காயங்கள் தான் அவருக்கு ஏற்பட்டிருப்பதாகவும் விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.