விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி ஷோவில் இது எலிமினேஷன் வாரம் என்பதால் ஒரு போட்டியாளர் ஷோவில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். இன்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் முதல் மெயின் டாஸ்காக போட்டியாளர்கள் இனிப்பு, துவர்ப்பு, கசப்பு சுவையில் சமைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.
மேலும் கோமாளிகள் முகம் இருக்கும் மேளம் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதில் தேர்வு செய்யும் சுவையின் அடிப்படையில் இந்த டாஸ்க் நடந்தது. மெயின் டாஸ்கில் சரியாக சமைக்காத சந்தோஷ் மற்றும் ரோஷ்ணி இருவரும் மட்டும் எலிமினேஷன் டாஸ்கில் போட்டியிட்டனர்.
அவர்கள் எதாவது பழத்தை தேர்வு செய்து அதில் ஒரு டிஷ் செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் சந்தோஷ் மாம்பழத்தை தேர்வு செய்ய, ரோஷ்ணி பலாப்பழத்தில் சமைத்தார். இறுதியில் அவர்கள் இருவரது டிஷ்களையும் சாப்பிட்ட நடுவர்கள் இரண்டுமே சூப்பர் என கூறினார்கள்.
மேலும் அதன் பின் யார் எலிமினேட் ஆவார்கள் என நினைக்கிறீர்கள் என மற்றவர்களிடம் கேட்க அர்ஜுன் கண்கலங்க தொடங்கினார். அதன் பின் செட்டில் இருந்த பலரும் கண்ணீர் விட தொடங்கி விட்டனர். மொத்த செட்டும் கண்ணீரில் மிதந்தது.
அப்போது தான் நடுவர்கள் தங்கள் தீர்ப்பை அறிவித்தனர். இந்த வாரம் எலிமினேஷன் இல்லை” என அவர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தனர். கண்ணீரில் இருந்த அனைவரும் இதை கேட்டு மகிழ்ச்சி ஆனார்கள்.