இந்த கால சினிமாவில் சமூக வலைதள பக்கங்களில் அதிக சினிமா பிரபலங்கள் இருந்து வருவதால் அதிக ரசிகர்களை பின் தொடர்ந்து கொண்டு வருகின்றார்கள். எந்த ஒரு சமூக வளைதல பக்கங்களுமே இல்லாமல் இருந்து வந்த போது கூட மொத்த இந்திய சினிமாவுமே கொண்டாடும் நடிகையாக இருந்து வந்தவர் ஸ்ரீதேவி.
அதுமட்டுமின்றி சினிமாவில் இருந்து வரும் நடிகைகளை விட அதிகமான ரசிகர்களை கவர்ந்த நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ஸ்ரீ தேவி இன்று என்ன தான் சமந்தா காஜல் அகர்வால் என்று பெரிய நடிகைகள் இருந்து வந்தாலும் அந்த காலம் முதல் இன்று வரைஅனைவராலும் கொண்டாடப்படும் நடிகையாக இருப்பவர் ஸ்ரீ தேவி
அவ்வளவாக யாரும் எளிதில் அவரை மறந்து விட முடியாது. சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ஹிந்தி சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழில் முக்கியமான நடிகை இவர் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கலை துறையில் ஆற்றிய பணிக்காக பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார். பின் நடிகை ஸ்ரீ தேவி பாலிவூட்டில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
அவரின் மறைவு பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடிகை ஸ்ரீ தேவி தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். இவர் அதிகமாக மீடியா பக்கமே தெரிந்தது இல்லை.