திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது தமிழில் அஜித்தை வைத்து பல படங்களை தயாரித்து வருகிறார். போனி கபூர் நடிக்கியா ஸ்ரீதேவியை திருமணம் செய்வதற்கு முன் மமோனா ஷவ்ரி கபூர் உடன் 13 வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்.
மேலும் அவர்களுக்கு அன்ஷுலா கபூர் என்ற மகளும், அர்ஜுன் கபூர் என்ற மகனும் உள்ளனர். அதன் பின் இவர் ஸ்ரீதேவியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். போனி கபூருக்கு ஜான்வி மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள்உள்ளனர். அர்ஜுன் கபூர் சினிமாவில் நடிகராக இருந்து வருகிறார்.
அவர் தன்னை விட 12 வயது மூத்த நடிகை மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார். இருவருக்கும் நடுவில் அதிக அளவு வயது வித்தியாசம் இருப்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில் அது பற்றி அர்ஜுன் கபூர் சமீபத்திய பேட்டியில் விளாசி பேசி இருக்கிறார்.
எப்போது திருமணம் இது எத்தனை நாள் நீடிக்கும். அவன் எப்படி இருக்கான் பாரு வாழ்க்கையே போச்சு.. இப்படி பல விதமாக பேசுவார்கள். அப்படி மக்கள் பேசுவதை மாற்ற ஒரு பேட்டி போதும்.