இன்றைய கால தமிழ் சினிமாவில்  நடித்து வரும் வனிதா ஆரம்பத்திலிருந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்று மக்களின் வெறுப்பினை சம்பாதித்து பின் நல்ல அம்மா என்று பெயர் வாங்கினார். ஆனால் அதுவும் சிறிது நாட்கள் கூட நீடிக்க வில்லை.

ஆம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து சர்ச்சையினை சந்தித்ததோடு அவரையும் சில மாதங்களில் பிரிந்தார். பின் அவ்வப்போது சில விஷயங்களால் செய்திகளில் வந்தார். பிக்பாஸ், சமையல் நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சியில் நடுவர் பின் பிபி ஜோடிகள் என நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

மேலும் இவர் நிறைய படங்களில்  கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.  இப்போது என்ன செய்தி என்றால் நடிகை வனிதா 4வது திருமணம் கண்டிப்பாக செய்து கொள்வார் என்றும் அந்த நபரின் பெயர் S என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் என்றும் ஒரு ஜோதிடர் கணித்ததாக பரபரப்பு செய்தி வெளியானது.

அதுமட்டுமல்லாமல் அரசியலில் வனிதா குதித்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போல் வருவார் என்றும் கூறுகின்றனர். இதைக் கேட்ட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.