திரையுலகில் தமிழ் சீரியல் பிரபலங்களில் அண்மையில் குழந்தை பெற்றது நடிகை ஆல்யா மானசா. அவருக்கு ஆண் குழந்தை பிறக்க அழகிய புகைப்படத்துடன் சஞ்சீவ் வெளியிட்டார். இப்போது பாலிவுட் சினிமாவின் பிரபல சீரியல் நடிகை டெபினா 12 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கர்ப்பமாகியுள்ளார்.
மேலும் இவர் தமிழில் 2005ம் வருடம் மாயாவி என்ற தொடர் மூலம் நாயகியாக அறிமுகமாநார். அதன் பிறகு அவர் நடித்த ராமாயணம் தொடர் அவரின் புகழை பெரிய அளவில் ரீச் ஆக வைத்தது. மேலும் அடுத்தடுத்து தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார்.
மேலும் ஒரு கட்டத்தில் பாலிவுட்டில் அதிகம் பயணிக்க ஆரம்பித்து இப்போ செட்டில் ஆகிவிட்டார். டெபினா ராமாயணம் தொடரில் ராமனாக நடித்த குர்மித் என்பவரை காதலித்து 2011ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
தற்போது டெபினா முதன் முறையாக கர்ப்பமாகியுள்ளார். அந்த செய்தியை கேட்டு பிரபலங்கள் வாழ்த்து கூறியுள்ளனர். இந்த நிலையில் நடிகை டெபினா கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் தலைகீழாக நின்றுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram