25 வயது பெண்ணை 45 வயது முதியவர் திருமணம் செய்த 4 மாதத்தில் அவருக்கு நேர்ந்த சோகம்…!!

Video

கர்நாடகாவில் 25 வயது பெண்ணை திருமணம் செய்து இணையத்தில் வைரலாகிய 45 வயது விவசாயி திருமணமான ஐந்து மாதத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம்  ஹிலியூர்துர்கா அருகே சவுடனகுப்பே என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கரண்ணா(45),

இவர் மேனகா என்ற 25 வயது பெண்ணை  சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். மேனகா கடந்த வருடம் அக்டோபர் மாதம் கணவரால் கைவிடப்பட்டவர்  உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கோவிலில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. சங்கரண்ணா வயதான தோற்றத்தில் காணப்பட்டதால் நெட்டிசன்கள் 60 வயது என்று தீர்மாணித்து மீம்ஸ்களை தெறிக்கவிட்டனர்.

இவர்களின் திருமணம் சமூக வலைத்தளத்தில் பெரும் பேச்சாக இருந்தது. நெட்டிசன்களின் கேலி கிண்டலை கண்டுகொள்ளாத தம்பதி தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவே கொண்டு சென்றள்ளனர். அவ்வப்போது டிக்டாக்கிலும் காணொளி வெளியிட்டு அசத்தி வந்தனர். இதில் மேனகா தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கின்றார்.

மேலும் இந்நிலையில் சங்கரண்ணா திடீரென மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு காரணம் சங்கரண்ணாவின் அம்மாவால் ஏற்பட்ட பிரச்சினையே என்று கூறப்படுகின்றது. மாமியார் மருமகள் பிரச்சனையில் பெங்களூர் சென்று தனியாக வாழலாம் என்று கணவரிடம் கூறியுள்ளார் மேனகா. ஆனால் தனது தாயை விட்டு வர முடியாது என்று கூறியதால் நாளுக்கு நாள் சண்டை ஏற்பட்டுள்ளது.

-Advertisement-

இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகின்றது. மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த சங்கரண்ணாவின் உடலை பார்த்து மனைவி மற்றும் அம்மாவும் கதறி அழுதுள்ளனர். பின் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சங்கரண்ணாவின் தாய்  ரங்கம்மா கூறுகையில் நேற்று முன் தினம் வயலில் மாடு மேய்த்து கொண்டிருந்தேன்… அப்போது என் மருமகள் நாயை அவிழ்த்து விட்டார். நான் பயத்தில் கீழே விழுந்துட்டேன். இது சம்பந்தமாக என் மகன் கிட்ட சொன்னேன்  என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்புமாறு மகனிடம் மருமகள் கூறியதால் ஏற்பட்ட சண்டையிலே மகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

கணவரின் தற்கொலை குறித்து மோகனா கூறுகையில், நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தோம், எனது மாமியார் என்னிடம் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டும், தனது கணவரிடம் தன்னைப் பற்றி தவறாக பழி போட்டும் குற்றம் சாட்டினார்கள். தனது தாய் தந்தையுடன் பேசக் கூட அனுமதிக்காமல் என்னிடம் சண்டையிட்டார்.

இப்படி எல்லாம் இருந்தால் குடும்பம் நடத்த முடியாது என்று என் கணவர் கூறியதற்கு மாமியார் அப்படின்னா செத்து போ என்று என் கணவரை திட்டினார். இதனால் தான் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தற்போது நான் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.