பிரபல நடிகை சாவித்திரியின் மகளா இவங்க… அம்மாவை மிஞ்சும் பேரழகில் ஜொலிக்கும் புகைப்படம் இதோ…!!

Cinema

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி தற்போது யாரும் கண்டிராத பல புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஈடு இணையில்லாத நடிகையாக வலம் வந்த நடிகை சாவித்திரி ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு பேரழகியாக  வலம் வந்தார்.

நடிகர் ஜெமினி கணேசனை விரும்பி காதலித்து திருமணம் செய்து கொண்ட சாவித்திரிக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இந்த நிலையில் அவர்கள் சிறு வயதில் குடும்பத்தாருடன் இருக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்பொழுது சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் சாவித்திரியின் மகன் சதீஷ் குமார் பிறந்த குழந்தையாக இருக்கும் போது ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி அவரை கையில் தூக்கி வைத்து கொஞ்சும் போது அருகில் விஜய சாமுண்டீஸ்வரி சமத்து குட்டி பெண்ணாக தம்பியை ரசித்தவாறு இருக்கும் புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார்.

இந்த அழகிய அரிய புகைப்படங்களை விஜய சாமுண்டீஸ்வரி தற்பொழுது இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் தீ யாய் பரவி வருகின்றது.