தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர்களுக்கு வாய்ப்பு இருப்பது போல் நடிகைகளுக்கு அவ்வளவாக மார்க்கெட் இருப்பதில்லை. அதுமட்டுமின்றி ஒரு சில நடிகைகள் மட்டுமே மக்கள் மனதில் நல்ல இடத்தை பெறுகின்றனர்.

மேலும் அந்த வகையில் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கும் நடிகை நதியா. தமிழ் சினிமாவின் 80ஸ், 90ஸ்-களில் கனவு நாயகியாக இருந்தவர்  இவர் 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன் பிறகு திரையுலகில் நல்ல மார்க்கெட் இருக்கும் போதே தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறிய நடிகை நதியா, பல வருடம் கழித்து எம்.குமரன் படத்தில் நடிக்க வந்தார். இந்நிலையில் நடிகை நதியா மற்றும் பிரபல நடிகர் சுரேஷ் இருவரும் இணைத்து பல திரைப்படங்கள் நடித்துள்ளனர்.

மேலும் படங்களில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பொழுது இருவரும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்ததாகவும் அப்போது ஒரு ச ர்ச்சை எ ழுந்தது.

இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சுரேஷ்  நானும் நடிகை நதியாவும் நல்ல நண்பர்கள். கடைசி வரை நண்பர்களாகவே இருப்போம். என்று கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.