சினிமாவை பொருத்தவரை வாய்ப்பிற்காக இயக்குனர்கள் எது வேண்டுமானாலும் செய்ய சொல்வார்கள். அதற்கு நடிகைகளும் ஒப்புக் கொண்டு நடிப்பார்கள். அந்த வகையில் இயக்குனர் பாலா கூறியதை செய்ய முடியாது என கூறி வாய்ப்பை தூக்கி எறிந்த நடிகை ஒருவர் சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

1999ல் தமிழ் சினிமாவில் சூப்பர் டூப்பர் படமாக அமைந்த படம் சேது. இந்த படத்தினை மிக சிறப்பாக இயக்கியிருப்பார் இயக்குனர் பாலா. விக்ரம், அபிதா, சிவக்குமார் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். விக்ரமின் நடிப்பிற்கு பிறகு பெரிய கதாபாத்திரமாக இருந்தது அபிதாவின் கதாபாத்திரம் தான்.

அந்த கதாபாத்திரத்திற்கு முதலில் சீரியல் வில்லி நடிகை ஷில்பா தான் நடிக்கவிருந்ததாம். அப்படத்தின் ஆடிஷனுக்கு ஷில்பா பாலாவை பார்க்க சென்ற போது என்னை தாவணியில் வர சொன்னதும் அப்படியே சென்றேன். ஆடிஷன் முடிந்ததும் 10 நாட்களுக்கு பின் நீ படத்தில் நடிக்கிறாய் என்று கூறினார்.

அதன் பின் படம் முடிய ஒரு வருடம் கூட ஆகலாம். அந்த சமயத்தில் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த சமயத்தில் ஷில்பாவிற்கு அதிக சீரியல் வாய்ப்புகள் வர பல தொடர்களிலும் நடித்திருந்தேன்.

இதனால் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று கூறி அப்படத்தினை மிஸ் பண்ணினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  மேலும் இது பற்றி எனக்கு கவலை எதுவும் இல்லாமல் சீரியலில் வேறு வேறு ரோலில் நடித்து வந்தேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.