ஒற்றை தாயாக இருந்து குழந்தைகளை பார்த்து வருகிறேன்… தன் கணவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் நடிகர் சேதுராமன் மனைவியின் உருக்கமான பதிவு…!!

Cinema

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும்  பல பிரபல நடிகர்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல நடிகர்களின்  இழப்புகளை பார்த்து வருகிறோம். அப்படி நடிகர் சந்தானத்தின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் சேதுராமன்.

மேலும் அப்படி இருக்கையில் நடிகர் சந்தானத்துடன் இவர் சில படங்களில் நடித்து இருந்தாலும் கூட நடிப்பு மட்டுமே முக்கியம்  இல்லாமல் ஒரு டாக்டர் என்பது பலருக்கு தெரியாத ஒன்று. இவர் பெரிய அளவிற்கு நடிகராக தெரியவில்லைல். ஆனால் இவர் யு டூப் சேனல்களுக்கு டாக்டராக அளிக்கும் பேட்டிகள் மூலம் இவர் பிரபலமானார்.

ஒரு நல்ல மருத்துவரை மக்களும் ஒரு நடிகரை திரையுலகமும் இழந்து விட்டது என பலரும் வருந்தினர். இவர் மறைவின் போது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார். அதன் பின் சில மாதங்களில் அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அதனால் சேதுராமன் மறு படியும் பிறந்து விட்டார் என அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

-Advertisement-

அப்படி இருக்கையில் சில மாதங்களுக்கு முன் அவர் உருக்கமான பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் இன்றுமே எனது கணவர் தன்னுடன் இல்லையே என்று எண்ணி ஏங்குவதாக அந்த பதிவில் கூறி இருந்தார்.  பலரும் அவருக்கு ஆறுதலாக சில கருத்துகளை கூறினார்கள்.

உலக தாயார் தினத்தில் அவர்  தன்னுடைய குழந்தையுடன் மட்டும் இல்லாமல் வீட்டு அருகில் இருக்கும் அனைத்து குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு  அனைவருக்கும் வாழ்த்துகளை கூறி இருந்தார். இந்த கேள்விகளுக்கு எல்லாம் அவர் கொடுத்திருந்த  பதில்கள் எல்லாம் பலரையும் நெகிழ வைத்து இருந்தது.

ஒற்றை ஆளாய் குழந்தையை வளர்க்க வேண்டும் என்பது எத்தனை தாய்மார்களுக்கு சிரமமாக இருக்கிறது. என இந்த கருத்துகள் மூலம் பலரும் தெரிந்து கொண்டதாக பதிவுகளை போட்டு வருகின்றனர்.