பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜனின் மகன்  பிரசாந்த் தியாகராஜன், தொழில் ரீதியாக பிரசாந்த் என்று அழைக்கப்படுகிறார் ஒரு இந்திய நடிகர் மற்றும் தொழிலதிபர் ஆவார். தமிழ் சினிமாவில் தனது படைப்புகளுக்காக அறியப்பட்டவர்.

மேலும் தமிழ் படங்கள் தவிர சில தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 48 வயதாகும் பிரசாந்த்திற்கு 2வது கல்யாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். முதல் கல்யாணம் தோல்வி அடைந்ததுடன் சமீபத்தில் விவாகரத்து பெற்றுள்ளார்.

இதனால் மகனுக்கு 2வது கல்யாணம் செய்து வைக்க தியாகராஜன் ஏற்பாடு செய்து வருகிறாராம். கூடிய விரைவில் நிச்சயதார்த்தம் பற்றிய அறிவிப்பை தியாகராஜன் வெளியிட போகிறாராம். இந்த வருட இறுதிக்குள் பிரசாந்த்தின் கல்யாணம் நடைபெற உள்ளதாம்.

மனப்பெண் பார்த்து முடிவு செய்த விட்டதாக கூறப்படுகிறது. 2 வதாக கல்யாணம் செய்ய உள்ள பிரசாந்த்திற்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.