தமிழ் திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணியில் இருப்பவர் அந்த பிரபல நடிகை. நடிகையிடம் அழகு மட்டுமல்ல அழகான குரல் வளமும் இருக்கிறது. இதனால் சினிமாவில் பல திரைப்படங்களில் இவர் பாடலையும் பாடியிருக்கிறார். தற்போது நடிகை பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சமீப காலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை இந்த படத்தில் இது வரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் உள்ளார். அப்படி வெளியான சில போட்டோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் இந்த நடிகை இதற்கு முன் சில திரைப்படங்களில் படுக்கை அறை காட்சிகளில் நடித்திருந்தார். இதனால் அவரை தேடி தற்போது அதே மாதிரி வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். இந்த நடிகை கதைக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டும் தயாராக இருக்கிறார்.
மேலும் இதனால் நடிகை சமீபத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் கூட ரொம்ப கவர்ச்சியாக நடித்திருக்கிறார். அதோடு அவர் இந்தப் படத்தை ரொம்பவும் எதிர்பார்க்கிறாராம். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தில் 70 லட்சம் சம்பளம் வாங்கும் நடிகை இனி அடுத்த படங்களில் ஒரு கோடி ரூபாயாக மாற்ற திட்டமிட்டுள்ளார்.
அதனால் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நடிகை ஒரு கோடி சம்பளம் வேண்டும் என்று கறாராக சொல்கிறாராம். ஏன் சம்பளத்தை ஏற்றி விட்டார்கள் என்று யாராவது கேட்டால் நடிகைக்கு உடனே கோபம் வந்து விடுகிறதாம். அவர் தன் சம்பள விஷயத்தில் இறங்கிப் போக கூடாது என்ற முடிவில் இருக்கிறாராம்.