தமிழ் திரையுலகில் 90ஸ் காலக்கட்டத்தில் ஏராளமான நடிகைகள் இடம் தெரியாமல் போய் விடுகிறார்கள். அந்த வகையில் நடிகர் அர்ஜீன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சுபஸ்ரீ. இவர் அப்போது கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்தாலும் பலரையும் ஈர்த்திருந்தார்.
மேலும் அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வலம் வந்தார். தமிழை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் அதிகமாக பேசப்பட்டார்.
தெலுங்கில் கிளாமர் நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த வகையில் நடிகை சுப ஸ்ரீ தெலுங்கில் ஒரு நல்ல இடத்தை பிடித்தார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் இல்லாமல் திருமணமாகி செட்டிலாகி விட்டார்.
மேலும் இவரைப் பற்றி எதுவும் தெரியாத நிலையில் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. அதில் உடல் எடைக் கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அவர் தானா இவர் என ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.