பிரபல நடிகை 41 வயதில் இரு குழந்தைகளுக்கு தாயான நிலையில் 8 வருடம் கழித்து மீண்டும் ஆர்யாவுடன் படத்தில் நடிக்கவுள்ளார்.. யார் அந்த நடிகை தெரியுமா??

Cinema

திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வேண்டும் என்று போட்டி போட்டு கடினமாக உழைத்து நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வயது ஆக பட வாய்ப்புகளும் சரிபட்டு வராததால் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்களிடன் விளையாடினார். இதையடுத்து தன்னைவிட 17 வயது குறைவான நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் தற்போது உடலை கட்டுக்கோப்பாக வைத்து சில படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் விஷால் மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் ‘அவன் இவன்’ படத்திற்கு பிறகு இணைந்து நடிக்கும் படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்க உள்ளார். இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டி நடிக்க உள்ளாராம்.

இவர் ஏற்கனவே ஆர்யாவுடன் வேட்டை படத்தில் மாதவனின் மனைவியாக ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருப்பார். இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் சமீரா ரெட்டி மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறாராம். இதற்காக உடற் பயிற்சியும் செய்து வருகிறார்.

-Advertisement-