சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் சொல்வதெல்லாம் செய்தால் தான் படத்தில் நடிக்க முடியும் அப்படி நடித்தவர்கள் தற்போது வரை டாப் ஆர்டரில் இன்னும் நிலைத்துள்ளனர்.

ஆனால் ஒரு சில நடிகைகள் அப்படி நடித்தால் தான் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் அதை நான் ஒரு காலமும் பல கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகைகள் இருக்கிறார்கள். இப்படியிருந்தால் அந்த காலத்திலேயே நடிகைகளை ஒதுக்கி விடுவார்கள்.

அந்த அளவிற்கு ஒதுக்கப்பட்ட நடிகைகளில் முதல் இடத்தில் இருப்பவர் தான் நடிகை நதியா. 80களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்த அவர் க் ளாமர் எனக்கு தேவையில்லாத ஒன்று என்று கூறும் அளவிற்கு குடும்ப பாங்கான நடிகையாக திகழ்ந்து வந்தார்.

படங்களை உதறியதால் வாய்ப்பினை இழந்து தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவருக்கு பின் அஜித்தின் ஆசை படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை சுவலட்சுமி ஆரம்பத்தில் இருந்து குடும்ப பாங்கான நடிகையாக திகழ்ந்தார். அதனாலேயே ஆள் அட்ரஸ் இல்லாமலே சென்று விட்டார்.

Leave a Reply

Your email address will not be published.