என்னது… இணையத்தில் வைரலாகும் தொகுப்பாளினி டிடியின் வளைகாப்பு புகைப்படம்… கர்ப்பமான வயிறுடன் வெளியான புகைப்படம்..!!

Cinema

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளர்கள் பல ரசிகர்கள் மத்தியில் நினைவுக்கு வரும் அளவிற்கு சிலர் தான் இருந்து வருகின்றார்கள். அப்படி ஒரு தொகுப்பாளராக ஒரே டிவி சேனலில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து வருகிறார்.

சின்னத்திரை மீடியா வாழ்க்கையில் மிக வெற்றிகரமாக இருந்து வந்த அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சில  சிக்கல்களால் மீண்டும் முழு நேரமாக தொகுப்பாளினியாக வருவது இல்லை. சில நிகழ்சிகளில் அவ்வப்போது தொகுத்து வழங்கி வருகிறார்.

இப்போது டிடியின் சகோதரி பிரியதர்ஷினியும் நிகழ்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்து இருக்கிறார். டிடி பலருக்குமே தெரியும் படியாக 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-Advertisement-

மேலும் திருமணம் முடிந்து சில நாட்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். பின் நடிப்பில் பயங்கர பிஸியாக இருக்கும் டிடி அவ்வப்போது தனது புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார். சுந்தர் சி இயக்கி வரும் புது படம் ஒன்றில் அவர் நடித்து வருகின்றார்.

இந்த படத்தின் பூஜையில் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. பின் ஊட்டியில் ஒரே ஷெடியூலில் படப்பிடிப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்நிலையில் டிடியின் கர்ப்பமான புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புதிய படத்தில் டிடி கர்ப்பமான வயிறுடன் வளைகாப்பு போடும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இக்காட்சியின் புகைப்படங்கள் தற்போது நடிகர் விச்சு மூலம் வெளியாகி ப ரப ர ப்பை ஏற்படுத்தியுள்ளது.