தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் தற்போது பிரபல இயக்குனர் பாபி இயக்கத்தில் மெகா 154வது படத்தை நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மேலும் இதனைத் தொடர்ந்து சிரஞ்சீவியின் 154வது திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ருதி ஹாசன் ஆர்போர்டு மற்றும் பொக்கே கொடுத்து அவரை வரவேற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நவீன் எர்னேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் மெகா 154 திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்திற்கு தேவி இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.