பெரும்பாலும் நமது முன்னணி நடிகர்கள் அனைவருமே தமிழ் மக்களிடம் ஒரு நல்ல வரவேற்பை பெற்று தான் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். தற்போது அந்த வகையில் பல முன்னணி மூத்த நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் நடிகர்களில் அதுவும் தமிழ் நடிகர்களில் பாடி பில்டர் என்றாலே முதலில் ரசிகர்களுக்கு நியாபகம் வருவது நடிகர் சரத்குமார் தான். அவர் அந்த காலத்தில் தனது நடிப்புத் திறமையால் கொடிகட்டிப் பறந்த நடிகர் ஆவார்.
ஆனால் தற்போது வரை தமிழ் திரைப்படத்தில் அவர் நடித்துக் கொண்டு தான் வருகிறார். ஆனால் பல வருடமாக அரசியல் என்று தனது நேரத்தை செலவழித்தார். ஆனால் தற்போது ஒரு வெப் சீரியசிலும் கூட நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் அவர் சொந்தமாகவே உருவாக்கியுள்ளார். இதனை எல்லாம் தாண்டி கல்லூரி படிக்கும் காலத்திலேயே பாடிபில்டராக இருந்தவர்.
அதன் பின்னர் சினிமாவில் வந்து இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் நல்ல வெற்றியைப் பெற்றார். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட நமது விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணப் பெட்டியை பிக்பாஸ் வீட்டிற்குள் எடுத்துச் செல்ல அவர்தான் வந்துள்ளார். அப்போது தனது வெப் சீரியஸ் பற்றிய செய்திகளைக் கூறியுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இது குறித்த ஒரு வீடியோ கூட நமது இணையத்தில் வெளியாகி வைரலானது. இவர் தற்போது கூட, பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பிறந்தால் பராசக்தி மற்றும் அடங்காதே உள்ளிட்ட படங்கள் இவர் நடிப்பில் உருவாகி, வெளியாகாமல் தள்ளி போய்க் கொண்டே இருக்கிறது.
இப்படிப் பட்ட நடிகர் சரத்குமார் ஆரம்ப காலம் முதல் தற்போது வரை தனது உடல் மீதான ஒரு பராமரிப்பை விட்டுக் கொடுக்காமல் உடற்பயிற்சி செய்து தான் வருகிறார். இப்படி ஒரு நிலைமையில் திடீரென நடிகர் சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் என்னுடைய அக்கா இவர்தான் என்று அவரது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த புகைப்படம் நமது சமூக வலைதள பக்கத்தில் பல லைக்குகளை குவித்து வருகிறது.