ஒரே வாரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி வீட்டில் நடந்த இரண்டாவது இழப்பு..!! இரங்கல் தெரிவிக்கும் திரை பிரபலங்கள்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் அண்ணன் தம்பி பாசங்களை அடிப்படையாகக் கொண்டு கூட்டு குடும்ப வாழ்க்கையை பற்றி விவரிக்கிறது. இந்த சீரியலில் மூத்த அண்ணனாக மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருப்பவர் தான் ஸ்டாலின்.

இவருடைய சொந்த வாழ்க்கையில் கடந்தவாரம் இவருடைய பெரியம்மா உயிரிழந்தார். அவருடைய மறைவுச் செய்தியைத் அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். அதன் பிறகு அந்தப் பதிவை ஸ்டாலின் நீக்கிவிட்டார். இதனையடுத்து தற்போது மீண்டும் ஒரு இரங்கல் பதிவை அவர் பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவு தன்னுடைய மனைவியின் தாயார் நேற்று மரணம் அடைந்ததாகவும் அவருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படி ஒரே வாரத்தில் அவரது குடும்பத்தில் ஏற்பட்ட இரண்டு தொடர் மரணம் அவரது குடும்பத்தில் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் மிகுந்த அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

By re v

Leave a Reply

Your email address will not be published.