தற்போதுள்ள இந்த காலகட்டத்தில் இருக்கும் ஒரு சில நடிகைகள் ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது வளர்ந்து சினிமாவில் நடிகையாகி உள்ளார்கள். அந்த வரிசையில் முதலில் குழந்தை நட்சத்திரமாக தேவர் மகன் திரைப்படத்தில் அறிமுகமாகி, அதன் பின் பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் என ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை நீலிமா ராணி.
இதையடுத்து பிரியசகி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் பின் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், மெட்டி ஒலி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் கூட நடித்து கலக்கி கொண்டு வந்தார். இதையடுத்து குடும்பத்தார் விருப்பப் பட்ட காரணத்தினால் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.
தற்போது நீலிமாராணிக்கு இரண்டு அழகான பெண் குழந்தை இருக்கிறது. பலருக்கும் இவருக்கு திருமணம் முடிந்த விஷயமே தெரியாது. அவ்வளவு அழகாக இன்னமும் தன்னுடைய அழகை மெயின்டைன் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்லணும்.
சின்னத்திரையிலும் சினிமாவிலும் எத்தனையோ விதவிதமான பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகை நீலிமா ராணி. இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே 12 வயது வித்தியாசமாம். இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் கூட இவர்களது திருமணம் முழுக்க முழுக்க காதல் திருமணமாம். அவர் விருப்பத்தினால் தான் இந்த திருமணம் நடந்ததாம்.
அவரது கணவர் ஒரு தமிழர். ஆனால் இவர் தெலுங்கு பேசுபவர். 21 வயதில் அவரை காதலித்து, இவர் தான் அவர் கணவரிடம் முதல் முதலில் லவ் ப்ரொபோஸ் பண்ணினாராம். ஆனால், இந்த நாள் வரைக்கும் இருவருக்கும் காதல் கொஞ்சம் கூட குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
இவர்களது திருமணம் மட்டுமல்ல அவர்களது குழந்தை கூட அவரது விருப்பத்தின் படி தான் பிறந்திருக்கிறது. மேலும், திருமணம் முடிந்து கிட்டத்தட்ட எட்டு மாதத்தில் இவரது தந்தை மறைந்து விட்டதால், அந்த சமயம் இவரது தம்பி அப்போது தான் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அதனால், என் தம்பி காலேஜ் எல்லாம் படித்து முடித்து விட்ட பிறகு தான் நமக்கு குழந்தை என்று கணவரிடம் கூறியிருக்கிறார். அவரது கணவரும் அதற்கு மறுப்பு சொல்லாமல் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அதன்படி அவரது தம்பி கல்லூரி படிப்பை முடித்த பிறகுதான் ஒன்பது வருடம் கழித்து இவர் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்.
அதுவும் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்ததால் தேவதையே பிறந்ததாக எண்ணி கொண்டாடியுள்ளனர். அந்த பெண் குழந்தை எங்கள் காதலின் முதல் அடையாளம். எங்கள் முழு சந்தோஷமும் அவள்தான் என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து தற்போது சமூக பக்கத்தில் இவர்களது குடும்ப புகைப்படம் வெளியானது…