தற்பொழுது சினிமாவில் நீண்ட நாட்களாக முன்னணி நடிகர்களாக வலம் வருவது ஒரு சிலருக்கு கஷ்டமாக இருந்து வருகின்றது. அந்த வகையில் இந்திய அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறவர்கள் என்றால் அது ஒரு சில நடிகர்களாக மட்டுமாகவே இருக்க முடியும். அந்த வகையில் நடிகர் சோனு சூட் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவில் 1999 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடித்து வெளிவந்த கள்ளழகர் என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து முதன் முதலில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஒஸ்தி, தேவி, நெஞ்சினிலே, சந்திரமுகி, சாகசம், அருந்ததி போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பொதுவாக வில்லன் என்றாலே மக்கள் மனதில் இடம் பெறுவது கடினம். ஆனால் தனது சிறப்பான நடிப்பாலும், அழகிய தோற்றத்தாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார் நடிகர் சோனு சூட். வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தார்.
மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தினால், ஊரடங்கு அமல் படுத்திய நேரத்தில் நடுத்தர குடும்பத்தினர் பலர் ஒரு வேளை உணவிற்கே திண்டாடி வந்தனர். இவர்களுக்கு பல பிரபலங்களும் தங்களால் முடிஞ்ச உதவியை மக்களுக்கு செய்து வந்தனர். ஆனால், அவர்களை எல்லாரையும் மீறி பாலிவுட் நடிகர் சோனு சூட் 28 மாநிலங்களுக்கு உதவி செய்துள்ளார்.
மேலும், அவர் உதவி செய்வதற்காக தனது 10 கோடி மதிப்பிலான சொத்தினை அடமானம் வைத்தார் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், கொரோனா காலத்தில் உதவிய அவரின் மனித நேயத்தை பாராட்டி தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் சித்திபெட் மாவட்டத்தில் துப்பதண்டா என்ற கிராமத்தில் மாவட்ட அதிகாரிகளின் உதவியுடன் நடிகர் சோனு சூட்டிற்கு கோயிலே கட்டி இருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.
மேலும், இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் நடிகர் சோனு சூட் அவர்கள் மக்களுக்காக நிறைய பல உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சோனு சூட் பஞ்சாப் மாநிலத்தில் மோகா என்னும் மாவட்டத்தின் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ஒரு கார் விபத்து ஏற்பட்டு ஒரு நபர் உயிருக்கு போராடிக் கொண் டிருந்தார்.
அந்த சூழ்நிலையில் அந்த நபரை கையால் தூக்கி சென்று தனது காரில் வைத்து மருத்துமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ பதிவு நீங்களும் பாருங்கள்…
Every Life Counts 🙏@SonuSood pic.twitter.com/veu5M6fcqU
— Sood Charity Foundation (@SoodFoundation) February 9, 2022