500 படங்களுக்கு மேல் நடித்தும் பல கோடி சொத்துக்களை வாங்கி குவித்து இன்றைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை போல் அன்றே வாழ்ந்த பிரபல பழம்பெரும் நடிகை..!! யார் அந்த நடிகை தெரியுமா..?

Cinema

சினிமா உலகைப் பொறுத்தவரை எப்போதுமே ஆண் நடிகர்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அது சொத்து விஷயமாக இருந்தாலும் சரி, சம்பள விஷயமாக இருந்தாலும் சரி, இவ்வளவு ஏன் புகழ் என்ற விஷயத்திலும் கூட ஆண்களுக்குத்தான் எப்போதுமே முதலிடம்.

அப்படி இருப்பவர்களுக்கு மத்தியில் சொந்தமாக கப்பல், விமானம், சொகுசு பங்களா என சொகுசாக வாழ்ந்த நடிகை பற்றி யாருக்காவது தெரியுமா? இந்த காலகட்டங்களில் நடிகைகள் ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதால் சொகுசு வாழ்க்கை சாத்தியம்.

அப்படி இருக்கையில் அந்த கால கட்டங்களிலேயே சொகுசு ராணியாக வாழ்ந்தவர்தான் கே ஆர் விஜயா. அதேபோல் இந்த காலத்தில் நயன்தாரா எப்படியோ அப்படித்தான் அந்த காலத்தில் கே ஆர் விஜயா. முன்னணி நடிகர்கள், இளம் நடிகர்கள் என்று பார்க்காமல் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தால் நடித்துக் கொடுக்க அவர் தயங்கியதில்லை.

-Advertisement-

அப்படி தன்னுடைய சம்பாதியத்தில் சொந்தமாக கப்பல், விமானம், சொகுசு பங்களா என வாங்கி சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ராணி போல தான் அவரது வாழ்க்கையும் இருந்ததாம். தற்போது கப்பல் விமானம் எதுவும் இல்லை என்றாலும் இப்போதும் சொகுசாக மகாராணி போலத்தான் வாழ்கிறார்.

அப்படி  நடிகை கே ஆர் விஜயாவுக்கு பிறகு அந்த அளவுக்கு தற்போது சொகுசாக வாழ்ந்து வரும் நடிகை என்றால் அது நம்ம லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான்.