தொகுப்பாளர் மற்றும் நடிகர் தீபக்கின் மனைவி மற்றும் மகன் யார் தெரியுமா.? அட இந்த பிரபலம் தானா!! முதன் முறையாக வெளியான புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்..!!

தொகுப்பாளர் மற்றும் நடிகர் தீபக்கின் மனைவி மற்றும் மகன் யார் தெரியுமா.? அட இந்த பிரபலம் தானா!! முதன் முறையாக வெளியான புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்..!!

Cinema

சின்னத்திரையில் இன்று ஏராளமான தொகுப்பாளர் இருந்தாலும் கூட ஒரு சிலருக்கு மட்டுமே  ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. அந்த வகையில் தீபக் தினகர் ஒருவர். இவர் திரைப்படம் மற்றும் முன்னணி தமிழ் தொலைக்காட்சி  நடிகர், மாடல், டப்பிங் கலைஞர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளரும் ஆவார். மேலும், சீரியல்  நடிகராக பல தொலைக்காட்சிகளில் கலக்கி வந்தவர் தீபக் தினகர்.

இவர் கெட்டி மேளம், நிலா உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சன் டிவியில் தென்றல் என்ற மெகா சீரியலில் தமிழ் என்ற கதாபாத்திரத்தில்    நடித்ததற்காக அவர் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தார். மேலும், தீபக் தினகர் சென்னையின் கில் ஆதர்ஷ்  மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். லயோலா கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார்.

-Advertisement-

மேலும், தொழில்துறையில் அவரது நண்பர்கள் கோலிவுட் நடிகர் விஜய், ஸ்ரீ குமார் மற்றும் சஞ்சீவ் இவர்களுடன் தீபக் கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினர். பின் படிப்பை முடித்த அவர் வீ டியோ ஜாக்கி ஆனார். பின்னர் அவர் தென்றல் உட்பட  பல சீரியல்களில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

ஜோடி நம்பர் ஒன் முதல் சீசனில் பங்கேற்ற அவர் பின்னர் இரண்டாவது சீசனில் வி ஜெ வாக ஆனார்.   விஜய் டிவியின் மூலம் பிரபலமாகி அதன் பின் தற்போது ஜீ தமிழில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். தொகுப்பாளர் தீபக் தினகர் 2008ஆம் ஆண்டு சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும், இவர்கள் இருவருக்கும் ஒரு அழகிய மகனும் இருக்கிறார். இந்நிலையில் தொகுப்பாளர்    தீபக்கின் மனைவி மற்றும் மகன் ஆகிய மூவரும் இணை ந்திருக்கும் அழகி ய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…