இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இணையத்தில் பின்தொடரும் ஒரே பிரபல சீரியல் நடிகை..? எந்த நடிகைக்கும் இல்லாத அங்கீகாரம் இவருக்கா..!! இதற்கு பின்னணியில் இப்படி ஒரு காரணமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க...!!

இசை உலகில் இந்திய சினிமாவையே தனது இசையால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள். இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு அசத்தலான இசையமைத்து அனைவரிடத்திலும் பிரபலமானார். மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதையும் வென்று இசை உலகிற்கே பெருமை சேர்த்தவர். இப்படியொரு நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல சன் டிவி சீரியல் நடிகையை பின் தொடர்வதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல்களில் ஒன்று சுந்தரி சீரியல். இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கேப்ரில்லா . இவர் முதலில் டிக் டாக் செயலியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் . இவர் எண்ணற்ற நிகழ்ச்சிகள் மற்றும் பல குறும்படங்களில் கூட நடித்துள்ளார். இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா என்ற திரைப்படத்தில் சிறு வயது நயன்தாராவாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் .

இதனைத் தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் இவர் கருப்பு நிறமாக இருக்கிறார் என்பதால் நிறத்திற்கும் சாதனை செய்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முறியடித்து சாதித்தும் வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் இவர். அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருவார் .

இந்நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹமான் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோ செய்து வருகிறாராம். அந்த வகையில் ஏ ஆர் ரகுமான் இன்ஸ்டாவில் பாலோ செய்யும் நபர்களின் எண்ணிக்கை வெறும் 73 பேர் தான். அதில் ஒரு முக்கிய நபராக திகழ்ந்து வருகிறார் நடிகை கேப்ரில்லா .

அது மட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கேப்ரில்லாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் கூட பதிவிட்டு இருந்தார். இவ்வாறு இவர் செய்வதற்கு காரணம் என்னவென்றால் கடந்த ஆண்டு மூப்பில தமிழ் தாயே என்ற ஆல்பம் பாடலை ஏ ஆர் ரகுமான் தான் இசை அமைத்திருந்தார்.

இந்த பாடலுக்காக ஏஆர் ர ஹ்மானுடன் இணைந்து கேப்ரில்லா பணியாற்றியிருந்தார். அந்த சமயத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தான் அவர் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதிலிருந்தே கேப்ரில்லாவிற்கும், ஏ ஆர் ரஹ்மானுக்கும் நல்ல அறிமுகம் இருந்ததால் தான் இன்ஸ்டாவில் இவரை பாலோ செய்து வருவதாக கூறப்படுகி றது…

By re v

Leave a Reply

Your email address will not be published.