விவாகரத்திற்கு பிறகு 41 வயதான நடிகையை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் பிரபல நடிகர்...! யார் தெரியுமா...?

விவாகரத்திற்கு பிறகு 41 வயதான நடிகையை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் பிரபல நடிகர்…! யார் தெரியுமா…?

Cinema

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் பர்கான் அக்தர். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ராக் என்ற படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமானார்.

இவர் நடிப்பில் வெளியான பாக மில்கா சிங் என்ற படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. கடைசியாக இவர் நடிப்பில் டூபான் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது.

மேலும் நடிகர் பர்கான் அக்தருக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு அதுனா பாபானி என்பவருடன் திருமணம் ஆனது. அவர்களின் 17 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் மனமொத்து விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில் ஹிந்தி நடிகையும், பிரபல பாடகியுமான ஷிபானி தந்தேக்கருடன் நடிகர் பர்கான் அக்தர் நெருக்கம் காட்டி வந்துள்ளார். 3 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

-Advertisement-

41 வயதாகும் ஷிபானியை 48 வயதாகும் பர்கான் அக்தர் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் திருமணம் வருகிற 21-ந்தேதி எளிமையான முறையில் நடக்க இருக்கிறது.