பிரபல நடிகர் திடீரென மரணமடைந்துள்ளார். மகாபாரத தொலைக்காட்சி தொடர் மட்டுமன்றி ஏரளாமான பாலிவுட் படங்களிலும் நடித்தவர் பிரவீன் குமார் சோப்தி. தமிழில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்திலும் கமலுடன் சேர்ந்து இவர் நடித்திருந்தார்.
பிஆர் சோப்ரா நடித்து புகழ் பெற்ற சீரியலான மகாபாரதத்தில் பீமன் வேடத்தில் நடித்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த பிரவீனின் மரணச் செய்தி அவரது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
74 வயதாகும் பிரவீன் டெல்லியில் இன்று மரணமடைந்தார். அவரின் இறுதிச் சடங்குகள் பஞ்சாபி பாக்கில் உள்ள தகன மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவைத் தவிர விளையாட்டிலும் ஆர்வம் காட்டிய பிரவீன் குமார் வட்டு எறிதல் மற்றும் ஹமர் த்ரோ ஆகியவற்றில் ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள அவர் இந்தியா சார்பாக இரண்டு முறை ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
1998ம் ஆண்டுக்குப் பிறகு சினிமா வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த பிரவீன் குமார் பின்பு அரசியலில் ஈடுபட்டார். ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த பிரவீன் குமார் பின்பு அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.