தற்போது யூடியூபில் வீடியோ போடுவது என்பது டிரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில் யூடியூபில் தங்களுக்கென ஒரு தனிச் சேனலை உருவாக்கி அதில் காமெடி வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் சதீஷ் மற்றும் தீபா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் யூடியூபில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து சென்னை தி நகர் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸ் என்ற மிகப் பெரிய கடையில் தங்களுக்கும், தங்களது குழந்தைகளுக்கும் தேவையான ஆடைகளையும், வீட்டிற்கு தேவையான சிலவற்றையும் ஷாப்பிங் செய்துள்ளனர்.

அப்போது அவர்கள் இருவரும் மாறி மாறி கவுண்டர் போட்டு பல்பு வாங்கிக் கொண்டு உள்ளனர். இவர்களின் இந்த கலகலப்பான ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸில் ஏற்கனவே எக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது யூட்யூப் பிரபலங்களான இவர்களும் ஷாப்பிங் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By re v

Leave a Reply

Your email address will not be published.