அருந்ததி படத்தில் சிறுவயது அருந்ததியாக நடித்த குழந்தையா இது!! இப்போது அனுஷ்காவையே மிஞ்சும் அளவிற்கு வளர்ந்து விட்டாரே!! இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ!! ஷா க் கில் ரசிகர்கள்…!!

Cinema

தமிழ் திரைப்படங்களில் ஒரு வித்தியாசமாக, யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அருந்ததி. இந்தத் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா கதாநாயகியாக நடித்திருப்பார். மேலும் இந்தப் படத்தில் சோனுசூட் தான் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார். வெளியான அனைத்து மொழிகளிலும் இந்தப்படம் மாபெரும் வெற்றியை கண்டது. இந்த படத்தில் அனுஷ்காவின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

அதனை அடுத்து அதிகமாக பலரை ஈர்த்த ஒரு கதாபாத்திரமாக இருந்தது சிறு வயது அனுஷ்காவாக நடித்த பெண்தான். அவருடைய பெயர் திவ்யா நாகேஷ். ஆனால் தற்போது இந்தப் படத்தில் குழந்தை கதாப்பாத்திரத்தில் நடித்தது போல் இல்லாமல் ஒரு பிரபலமான நடிகை போல இந்த சிறு வயதிலேயே நடித்திருப்பார் நமது நடிகை திவ்யா நாகேஷ். ஆனால் இந்த ஒரு படத்தில் நடித்து தற்போது வரை தமிழ் மக்களை கவர்ந்து விட்டார்.

ஒரு நாள் ஒரு சீரியல் படப்பிடிப்பினை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்த இவருக்கு அந்த சீரியலின் இயக்குனர்தான் திவ்யாவை நடிக்க வைத்து இருகின்றார். இதற்கு திவ்யாவின் அப்பா ஓ கே சொல்ல அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார் திவ்யா. ஆனால் தற்போது வரை நமது குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை திவ்யா நாகேஷ் தமிழ் திரைப்படத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

-Advertisement-

அந்த வகையில் நமது நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் திரைப்படத்தில் விக்ரமுக்கு தங்கையாக நடித்திருப்பார். அதன் பின்னர், தமிழில் அது ஒரு கனா காலம், ஜில்லுன்னு ஒரு காதல்,போன்ற படங்களிலும்  குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதுவரை கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் திவ்யா. தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை திவ்யா நாகேஷ் தற்போது  தமிழ் படத்தில் வாய்ப்பு இல்லாமல் போகவே தற்போது தெலுங்கு பக்கம் திரும்பியுள்ளார்.

 

ஆனால் தற்போது அந்த பக்கமும் பட வாய்ப்பு குறைவாகத் தான் இருக்கிறது. இப்போது மீண்டும் பட வாய்ப்புகளைத் தேடி அவரது சமூக வலைதள பக்கங்களில் அதிக ஆக்டிவாக இருந்து வருகின்றார். விரைவில் இவரை தமிழ் அல்லது தெலுங்கு சினிமா படங்களில் பார்க்கலாம் என்கின்றனர் நமது இணைய வாசிகள்.