70 வயதாகியும் இந்த ஒரு பிரபல முன்னணி நடிகையுடன் நடிக்க ஆசைப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினி..!! காரணம் என்ன தெரியுமா..?? ஓஹோ..!! இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்பா!!

70 வயதாகியும் இந்த ஒரு பிரபல முன்னணி நடிகையுடன் நடிக்க ஆசைப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினி..!! காரணம் என்ன தெரியுமா..?? ஓஹோ..!! இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்பா!!

Cinema

சூப்பர் ஸ்டார் என்றாலே ரஜினிதான். அவருக்கு நிகர் அவர் தான். அந்த காலத்தில் ரஜினிக்கு போட்டியாக நடித்த நடிகர்கள் தற்போது எந்த படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால் ரஜினிகாந்த் தொடர்ந்து இன்று வரை தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ரஜினிகாந்தின் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தாலும், இவருடைய வயதை தான் பலரும் சமீப காலமாக குறிப்பிட்டு காட்டி வருகின்றனர்.

ரஜினிகாந்துடன் தற்போது இருக்கும் இளம் நடிகைகள் யார் நடித்தாலும் படம் பார்க்கும் அந்த நேரத்தில் வேண்டுமானால் ரசிகர்கள் அனைவரும் அவரை கொண்டாடுகின்றனர். ஆனால் படம் பார்த்து விட்டு வெளியே வந்த பிறகு பலரும் ரஜினிகாந்திற்கு பேத்தி வயதுடைய பெண்ணுடன்  ஜோடி சேர்ந்து நடிப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனைக் கேட்ட ரஜினிகாந்த் இனி தான் நடிக்கும் படங்களில் பெரிய அளவில் தற்போது இருக்கும் இளம் நடிகைகளுக்கு வாய்ப்பு தருவதில்லை எனக் கூறியுள்ளார். மேலும் தனக்கு நிகராக இருக்கும் வயதில் ஓரளவு மட்டுமே குறைவாக இருக்கும் நடிகைகள் மட்டும் தான் தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

-Advertisement-

இதனால்தான் ரஜினிகாந்த் நடித்த தர்பார் மற்றும் அண்ணாத்த 2 படங்களிலும் கூட நயன்தாராவையே தேர்வு செய்துள்ளனர். அதாவது ரஜினிகாந்த்க்கு பிறகு கதாநாயகிகளில் அதிக வயது கொண்டவர் நயன்தாரா. அதனால்தான் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்களில் மூத்த நடிகை என்பதால் நயன்தாராவிற்கு அவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகக் கூறி வருகின்றனர்.

ஆனால் காலா படத்தில் ஈஸ்வரி ராவ், கபாலி படத்தில் ராதிகா ஆப்தே இவர்கள் நடித்திருப்பார்கள். இவர்கள் இருவருமே வயது அதிகமானவர்கள் தான். அதனால் படங்களும் அந்த அளவில் பெரிய  மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

ரஜினிகாந்த் தற்போது இருக்கும் இளம் கதாநாயகிகளில் யாருக்கு வயது அதிகமாக இருக்கிறதோ அவருடன் மட்டுமே தன்னை ஜோடியாக போடும்படி கேட்டுக் கொண்டதாக கூறுகின்றனர். அதனால் தான் நயன்தாராவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாகவும் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.