பிரபல முன்னணி சீரியல் நடிகர் பாண்டி பஜார் தீ விபத்தில் குடும்பத்துடன் சிக்கினார்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

பிரபல முன்னணி சீரியல் நடிகர் பாண்டி பஜார் தீ விபத்தில் குடும்பத்துடன் சிக்கினார்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Cinema

சென்னையின் டி நகர் பாண்டி பஜார் பகுதியில் மிகவும் ஏராளமான கடைகளும், வணிக வளாகங்களும் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. மக்கள் அதிகமாக பொருட்கள் வாங்க வரும் பகுதி என்பதால் அந்த இடத்தில் எப்போதும் கூட்ட நெரிசலாக தான் இருக்கும்.

இந்நிலையில் இன்று பாண்டி பஜாரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திடீரென அதிகமாக தீப்பிடித்துள்ளது. 3 தளங்கள் கொண்ட இந்த வணிக வளாகத்தில் தீப்பற்றி எறிந்த நிலையில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் மிகுந்த போராட்டத்திற்கு பின் தீயை அணைத்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் பிரபல முன்னணி தமிழ் சின்னத்திரை நடிகர் ஸ்ரீ அவரது குடும்பத்தினருடன் சிக்கிக் கொண்டுள்ளார். சுமார் 70 பேர் மூன்றாவது மாடியில் சிக்கியிருந்த நிலையில் எப்படியோ தீயணைப்பு துறையினர் திறம்பட செயல்பட்டு தங்களை காப்பாற்றியதாக நடிகர் ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

-Advertisement-