தற்போது சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி இணைய தளத்திலும் அதிகமாக பேசப்படுவது பிரபல நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்பு பிரச்சனை தான்.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்ததோடு மட்டுமல்லாமல் 18 ஆண்டுகள் சேர்ந்து  வாழ்ந்து வந்துள்ள நிலையில், இவர்கள் சந்தோசமாக வாழ்ந்ததன் அடையாளமாக இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி இரவு சமூக வலைத் தளங்களில் தாங்கள் பிரிவதாக இருவரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

சந்தோசமாக வாழ்ந்து வந்த இவர்களின் பிரிவிற்கு காரணம் என்ன? இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர்வார்களா? இல்லையா..? என ரசிகர்கள், குடும்பத்தினர் மட்டுமின்றி நண்பர்களின்  எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகின்றது.

இந்நிலையில் சமீபமாக ஐஸ்வர்யா தனது தந்தையான பிரபல நடிகர் ரஜினிக்கு போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் மிகுந்த கோபத்தில் சத்தமிட்டதுடன், முகத்தில் அறைவது போல் போனை துண்டித்து விட்ட நிகழ்வும் அனைவரின் மத்தியிலும் வைரலாகியது.

பின்பு தந்தையின் கோபத்தினை தணிப்பதற்காக, அவரது விருப்பப்படி தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பப்பட்டு அவரின் தந்தையான கஸ்தூரி ராஜாவிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ தனுஷ்க்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம். அடம் பிடித்த தனுஷ் பின்பு தந்தை கஸ்தூரி ராஜாவின் சமாதானத்தை ஏற்றுக் கொண்டு சேர்ந்து வாழ சம்மதம் கூறியுள்ளார்.

By re v

Leave a Reply

Your email address will not be published.