சூப்பர்ஸ்டார் அவர்களின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐஸ்வர்யா பகிர்ந்துள்ள இன்ஸ்டா போஸ்டில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்த பிறகும் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தயவு செய்து அனைவரும் கட்டாயம் மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள். தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். மேலும் பாதுகாப்பாக இருங்கள். 2022 ஆரம்பத்திலிருந்தே என்னென்னவோ நடக்கிறது. இன்னும் என்னவெல்லாம் எனக்காக வைத்திருக்கிறது என பார்ப்போம் என்று ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இவர்கள் இருவருமே சமீபத்தில் தான் தாங்கள் இருவரும் பிரிய போவதாக அறிவித்திருந்தனர். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தாங்கள் தற்போது பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக தங்களின் சோஷியல் மீடியாக்களில் அறிவித்திருந்தனர்.
இதனால் மீடியா, சோஷியல் மீடியா என எங்கு திரும்பினாலும் இவர்கள் இருவரின் பேச்சாகத் தான் இருந்தது. இவர்களின் இந்த திடீர் விவாகரத்து முடிவிற்கு என்ன காரணம் என பலவிதமான தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது.
தனுஷை பிரிவதாக போட்ட போஸ்டிற்கு பிறகு ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் வேறு எந்த போஸ்டும் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சோஷியல் மீடியா பக்கத்தில் இருந்து தனது பெயரின் பின்னால் இருக்கும் தனுஷின் பெயரைக் கூட அவர் நீக்கவில்லை.
இந்நிலையில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றிய நிலையில் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, தனக்கு கொரோனா பாதித்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லை ரஜினி குடும்பத்திற்கு என்னடா இது சோதனை காலமாக இருக்கின்றது என்று ரசிகர்கள் புலம்பியும் வருகின்றனர்.
View this post on Instagram