நடிகர் அஜித் எப்போதும் தான் உண்டு தனது வேலை என்று பிசியாக இருப்பவர். படங்கள் நடிப்பதைத் தாண்டி பல விஷயங்களில் தனது ஈடுபாட்டை காட்டி வருகிறார்.
அவர் செய்யும் விஷயங்கள் ரசிகர்களை ஊக்குவிக்கும் விஷயமாக கூட இருக்கிறது என்றே கூறலாம்.
ரசிகர் மன்றங்கள் வேண்டாம், சமூக வலைதளங்கள் எதுவும் வேண்டாம் என கொஞ்சம் விலகியே இருக்கிறார் அஜித். இந்த நேரத்தில் தான் அவரது மனைவி நடிகை ஷாலினி டுவிட்டரில் இணைந்து விட்டதாக ஒரு சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் உலா வருகிறது.
ஆனால் அது நிஜமாக நடிகை ஷாலினியின் டுவிட்டர் பக்கம் இல்லையாம். இதனை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவே கூறியுள்ளார்.
There is a fake twitter account in the name of #MrsShaliniAjithkumar and we would like to clarify that she is not in twitter. Kindly ignore the same .
— Suresh Chandra (@SureshChandraa) February 2, 2022