நாளை மறுநாள் பிறந்த நாளன்று திருமண தேதியை அறிவிக்கின்றாரா நடிகர் சிம்பு...? யார் அந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா...? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...!!

நடிகர் சிம்பு நாளை மறுநாள் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினம் அவர் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று செய்திகள் கசிந்து வருவது ரசிகர்களிடத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது சிம்பு நடித்து வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் அப்டேட் மற்றும் அவர் அடுத்ததாக நடிக்க உள்ள ’பத்து தல’ என்ற திரைப்படத்தின் அப்டேட் ஆகியவை சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3 அன்று வெளிவரும் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ’ஈஸ்வரன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை நிதிஅகர்வாலை சிம்பு காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் வதந்திகள் இணையதளங்களில் உலாவி வருகிறது.

இந்த நிலையில் நாளை மறுநாள் சிம்பு தனது பிறந்தநாளின் போது நிதி அகர்வாலை திருமணம் செய்வது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது நாளை மறுநாள் தான் தெரியவரும்.

சிம்புவை காதலிப்பது குறித்து வெளியான செய்திக்கு கருத்து கூறிய நிதி அகர்வால் ’சில வதந்திகள் உண்மையாக இருக்கலாம், சில பொய்யாகவும் இருக்கலாம். உண்மை என்ன என்பது நமது பெற்றோருக்கு மட்டும் தெரிந்தால் போதும், வதந்திகளை பற்றி கவலைப்பட தேவையில்லை’ என்று பதில் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

By re v

Leave a Reply

Your email address will not be published.