பிரபல இயக்குனர் அஸ்வின் சரவணன் என்பவர் 2015-ல் நயன்தாரா நடிப்பில் “மாயா” என்ற படத்தை இயக்கினார். அதற்குப் பிறகு நடிகை டாப்ஸி நடிப்பில் வெளிவந்த “கேம் ஓவர்” படத்தை இயக்கினார். அடுத்து 2018ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் “இரவாகாலம்” படத்தை இயக்கினார்.
ஆனால், அந்த படம் நிதி நெருக்கடியின் காரணமாக வெளிவராமல் இருக்கின்றது. இப்படத்திற்காக ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்பொழுது அஸ்வின், நயன்தாராவை வைத்து “கனெக்ட்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நேரத்தில் இயக்குனர் அஸ்வின் சரவணன் அவர் காதலித்து வந்த காவியா ராம்குமாரை ஜனவரி 30 (நேற்று) புதுச்சேரியில் மணந்துகொண்டார்.
இச்செய்தியை அஸ்வின் சரவணன் அவரின் இணையதளப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “பேனா பேப்பரில் ஆரம்பமாகிய இந்த உறவு கவிதையில் முடிந்துள்ளது. ஒவ்வொரு தடவையும் என்னோடு சேர்ந்து புயலை கடக்கின்ற உனக்கு நன்றி. குறிப்பாக மூன்றாவது அலையின் போது உன்னோடு இப்படி செய்வதே ஒரு சாகசம் போல் உள்ளது” என அவர் பதிவில் கூறியுள்ளார்.
It started with pen and paper. It has ended in poetry ♥️ Kaavya Ramkumar, thank you for riding out the storm with me every single time. Doing this with you, especially during the third wave, was an adventure by itself. pic.twitter.com/WWlGs3lrm7
— Ashwin Saravanan (@Ashwin_saravana) January 30, 2022