பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன், கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு படு விமர்சியாக நடைபெற்றது.
இதில் பல்வேறு பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தாலி எடுத்து கொடுத்து அவரின் தலைமையில் இந்த திருமணத்தை நடத்தி வைத்திருந்தார்.
தற்போது சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றார். திருமணமான 6 மாதத்தில் முதல் முறையாக மனைவியை பிரிந்திருக்கின்றார். இது குறித்து அவரின் மனைவி மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவில், ஸ்ரீகாந்த் – சினேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் படத்தில் இடம்பெற்ற ‘பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை’ என்ற பாடலைப் போட்டிருக்கிறார். திருமணமாகி ஆறு மாதத்தில் கணவனைப் பிரிந்த சோகத்தில் கன்னிகா இந்த பதிவை பதிவிட்டு இருக்கிறார்.
இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும், கன்னிகா பதிவிட்டு இருக்கும் ஏப்ரல் மாதத்தில் பொய் சொல்ல இந்த மனசுக்கு என்ற பாடல் சினேகன் எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது.