வனிதா நீங்க ஒன்னும் பிக் பாஸ் ஓனர் இல்லை… சாதாரண ஹவுஸ் மேட் தான்! வனிதாவுக்கு நோஸ்கட் கொடுத்த அந்த நபர் யார் தெரியுமா…? முதல் நாளே வெடித்த சண்டை…!! இனி என்னாகுமோ…?

Cinema Video

பிக் பாஸ் ஷோவில் இதுவரை முடிந்திருக்கும் ஐந்து சீசன்களில் அதிகம் சர்ச்சைகளை ஏற்படுத்திய போட்டியாளர்களை ஒன்று சேர்த்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடி ஷோ ஒன்று தொடங்கப்பட்டு இருக்கிறது.

நேற்றைய நாள் துவக்க விழா நடைபெற்று பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். வீட்டுக்குள் என்ன நடக்கிறது என ரசிகர்கள் 24 மணி நேரமும் தவறாமல் பார்க்கலாம். இந்நிலையில் இன்று முதல் நாளே போட்டியாளர்களுக்கு நடுவில் பிரச்சனை தொடங்கி இருக்கிறது.

முதல் டாஸ்க்கில் வனிதா கோபித்துக் கொண்டு வெளியில் சென்றுவிட்டார். அதன் பின் மீண்டும் நான் கேமுக்கு வருகிறேன் என சொல்லி திரும்பவும் வருகிறார். ஆனால் ஷாரிக் அதை அனுமதிக்க மாட்டேன் என சொல்லி திரும்பவும் பிடிவாதம் பிடிக்கிறார்.

-Advertisement-

உடனே வனிதா கொந்தளித்து கத்த, ‘இது உங்களோட சொந்த வீடு கிடையாது. அப்படினு நெனைச்சிக்கிட்டிங்களா. நீங்க ஒன்னும் ஓனர் இல்லை, எல்லோரையும் போல ஹவுஸ்மேட் தான்’ என பாலாஜி முருகதாஸ் கூறி நோஸ்கட் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.