ஒரு திருமணத்தில் மணமகளின் அண்ணன்கள், அந்த பெண்ணின் மணநாளில், அவர் மேல் அன்பு மழை பொழியும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த திருமண வீடியோவில் நாம் காணும் காட்சி சற்று வித்தியாசமாக உள்ளது. இதில் ஒரு திருமணத்தில் வித்தியாசமான பாரம்பரியம் காணப்படுகிறது.
இங்கு மணமகளின் சகோதரர்கள் தங்கள் சகோதரியை மணமேடைக்கு வரவேற்கும் விதத்தை பார்க்கும் போது, பார்ப்போரின் கண்கள் கலங்குகிறது.
இந்த வீடியோவைப் பார்த்து பல நெட்டிசன்களால் தங்கள் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறுகின்றனர்.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ‘witty_wedding’ என்ற பயனர் வெளியிட்டார். இந்த வீடியோ 8,100க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது.
மேலும் துவக்கத்தில், அழகான சிவப்பு நிற லெஹங்காவில் மணமகள் திருமண மண்டபத்துக்குள் நுழையத் தயாராக இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.
இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் நெட்டிசன்களை கண் கலங்க வைத்து செம்ம வைரலாகி வருகிறது.
View this post on Instagram