பிரபல முன்னணி காமெடி நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல இளம் நடிகை..!! அட இவரா என ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!!

Cinema

பிரபல முன்னணி காமெடி நடிகர் வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இளம் பிரபல நடிகை ஒருவர் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ- எண்ட்ரி கொடுக்கும் நடிகர் வடிவேலு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில்  நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவருடன் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, புகழ், சிவாங்கி ஆகிய பலர் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிப்பதாக தெரிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜியின் படத்திலும், விஜய் சேதுபதி படத்திலும் ஷிவானி பிசியாக நடித்து வரும் நிலையில் வடிவேலு படத்தில் இணைந்துள்ளதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

-Advertisement-