குக் வித் கோமாளி பிரபலம் புகழின் முதல் குழந்தைக்கு இன்று பிறந்தநாள்..!! புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட பதிவு..!!

Cinema

குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் பிரபலமாகி நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் தான் புகழ். இவர் நடித்த சபாபதி மற்றும் என்ன சொல்ல போகிறாய் ஆகிய 2 படங்கள் இதுவரை வெளிவந்துள்ளது. மேலும், வலிமை, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்களில் நடிப்பதால் இவர் பிசியாகி விட்ட காரணத்தினால் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ் கோமாளியாக வரவில்லை என்பது சோகமான விஷயம் தான். ஒரு சில எபிசோட்டுகள் மட்டும் கெஸ்ட்டாக வந்து செல்கிறார். இந்நிலையில் பிரபலமான பிறகு புகழ் கடந்த வருடம் சொந்தமாக கார் ஒன்றை வாங்கியிருந்தார்.

மேலும் தற்போது அந்த காரை வாங்கி ஒரு வருடம் ஆகிய நிலையில் தற்போது அந்த காருக்கு பிறந்தாள் கொண்டாடியுள்ளார். ஆம் கருப்பன் என அந்த காருக்கு பெயர் வைத்துள்ள புகழ், கருப்பன் தான் தனது முதல் மகன்” என பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)