மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்த நாகினி சீரியல் புகழ் மௌனி ராயின் திருமணம்..!! அட மாப்பிளை இவர் தானா..!! இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..!!

Cinema

பாலிவுட் சினிமாவில் ஒரு தொடர் படு பிரபலமாக ஓடியது. வெறும் பாம்பின் கதையை வைத்து 5 சீசன்களுக்கு மேல் வெவ்வேறு கதைக்களத்தில் ஒளிபரப்பி இருக்கிறார்கள். விரைவில் இந்த தொடரின் 6வது சீசனும் வர இருக்கிறது, அதற்கான புகைப்படங்கள் எல்லாம் தற்போது வெளியாகி இருந்தது.

அந்த தொடர் வேறு எதுவுமில்லை நாகினி தான். இந்த நாகினி தொடர் மூலம் தமிழ் மக்களுக்கும் நன்கு பரீட்சயப்பட்ட நடிகையாக மாறியவர் மௌனி ராய். இவர் எல்லா இளைஞர்களின் மனதையும் கொள்ளைகொண்ட ஒரு சீரியல் நடிகை. தற்போது இவருக்கு இன்று கோலாகலமாக மலையாள முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

மௌனி ராய் சுராஜ் நம்பியார் என்பவரை தான் இவர் காதலித்து திருமணம் செய்துள்ளார். பிரபல துபாய் தொழிலதிபரான சுராஜ், மௌனி ராயை முதன்முதலில் 2019ம் ஆண்டு நியூஇயர் அன்று தான் இவர் சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதோ இருவரின் திருமண புகைப்படம்,

-Advertisement-