பிரபல காமெடியன் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா பிகில் படத்தில் பாண்டியம்மா என்கிற முக்கிய ரோலில் நடித்து பிரபலம் ஆனார். அதற்கு முன்பே அவர் டிக்டாக் வீடியோக்கள் நிறைய வெளியிட்டு இணையத்தில் பிரபலமாகத்தான் இருந்தார்.
அவர் நடித்த பிகில் படத்திற்கு பிறகு அவர் ஜீ தமிழின் சர்வைவர் ஷோவில் ஒரு சாக போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் அவர் பாதியிலேயே எலிமினேட் ஆகிவிட்டார்.
இந்நிலையில் தான் தற்போது இந்திரஜா குடியரசு தின ஸ்பெஷலாக புலி போன்ற அதிரடி மேக்கப் போட்டுகொண்டு போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அவரா இது என பலருக்கும் ஆச்சர்யம் அளித்திருக்கின்றன அந்த புகைப்படங்கள்.